சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள், மேதைகள், தவசிகள் யாவரும் தங்கள் அனுபவத்தில் பார்த்து இதற்கு பரிகாரமாக சில தெய்வீக மூலிகைகள், மனிதன் வளமாக வாழ்வதற்கும், அந்த மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஓலைச்சுவடிகளில் எழுதியுள்ளார்கள். அதை நம் முன்னோர்கள், அனுபவபூர்வமாக உணர்ந்து கிரக பாதிப்புகள், தோஷங்கள், செய்வினை கோளாறுகள், எதிரிகளால் வசப்பட்டு புத்தி பேதலித்த நிலையிலிருந்து விடுபட என்று நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு வாழ வழிகாட்டியுள்ளார்கள்
அதன்படி நவக்கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபட அந்த அந்த கிரகங்களை சாந்தி செய்து அதற்கு உண்டான மூலிகை ரட்சைகள் நம் தேகத்தில் தரித்து பூஜித்து வர, அந்த அந்த கிரகங்கள் கண்டிப்பாக நம் மீது கருணை கொண்டு நமக்குத் தேவையான நன்மைகளை செய்வார்கள்.