இந்த இலக்கணமுறையில் அபிராமியை பற்றி பட்டர் பாடியதால் அது அபிராமி அந்தாதி என்று அழைக்கப்படுகிறது.
அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பலன் தருவதாகக் சொல்கிறார்கள்.
உதாரணமாக உதிக்கின்ற செங்கதிர் எனத்
தொடங்கும் முதல் பாடல் நல்வித்தையும், ஞானமும் தரும் எனவும், நின்றும் இருந்தும் கடந்தும் எனத் தொடங்கும் 10-ஆம் பாடல்
மோட்ச சாதனம் பெறவும், தண்ணளிக்கென்று முன்னே பலகோடி எனத்தொடங்கும் 15-ஆம் பாடல் பெருஞ்செல்வமும் பேரின்பமும்
பெறவும் உதவும் எனக்கூறப்படுகிறது. இப்படியே 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:-
1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
4. உயர்பதவிகளை அடையலாம்.
5. மனக்கவலை தீரும்.
6. மந்திர சித்தி பெறலாம்.
7. மலையென வருந்துன்பம் பனியென நீங்கும்.
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
9. அனைத்தும் கிடைக்கும்.
10. மோட்ச சாதனம் பெறலாம்.
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.
13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
14. தலைமை பெறுவார்கள்.
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
18. மரணபயம் நீங்கும்.
19. பேரின்ப நிலையை அடையலாம்.
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
22. இனிப்பிறவா நெறி அடையலாம்.
23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
24. நோய்கள் விலகும்.
25. நினைத்த காரியம் நிறைவேறும்.
26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
27. மனநோய் அகலும்.
28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
29. எல்லா சித்திகளும் அடையலாம்.
30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
32. துர்மரணம் வராமலிருக்கும்.
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.
35. திருமணம் நிறைவேறும்.
36. பழைய வினைகள் வலிமை அழியும்.
37. நவமணிகளைப் பெறுவார்கள்.
38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம்.
40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.
41. நல்லடியார் நட்புப்பெறும்.
42. உலகினை வசப்படுத்தும்.
43. தீமைகள் ஒழியும்.
44. பிரிவுணர்ச்சி அகலும்.
45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
46. நல்நடத்தையோடு வாழ்வார்கள்.
47. யோகநிலை அடைவார்கள்.
48. உடல்பற்று நீங்கும்.
49. மரணத்துன்பம் இல்லாதிருக்கும்.
50. அம்பிகையை நேரில் காண முடியும்.
51. மோகம் நீங்கும்.
52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.
53. பொய்யுணர்வு நீங்கும்.
54. கடன்தீரும்.
55. மோன நிலை கிடைக்கும்.
56. அனைவரையும் வசப்படுத்தலாம்.
57. வறுமை ஒழியும்.
58. மன அமைதி பெறலாம்.
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.
60. மெய்யுணர்வு பெறலாம்.
61. மாயையை வெல்லலாம்.
62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.
63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.
64. பக்தி பெருகும்.
65. ஆண்மகப்பேறு அடையலாம்.
66. கவிஞராகலாம்.
67. பகைவர்கள் அழிவார்கள்.
68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.
69. சகல சவுபாக்கியங்களும் அடைவார்கள்.
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.
71. மனக்குறைகள் தீரும்.
72. பிறவிப்பிணி தீரும்.
73. குழந்தைப்பேறு உண்டாகும்.
74. தொழிலில் மேன்மை அடையலாம்.
75. விதியை வெல்வார்கள்.
76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.
77. பகை அச்சம் நீங்கும்.
78. சகல செல்வங்களையும் அடைவார்கள்.
79. அபிராமி அருள்பெறுவார்கள்.
80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும்.
81. நன்னடத்தை உண்டாகும்.
82. மன ஒருமைப்பாடு அடையலாம்.
83. ஏவலர் பலர் உண்டாகும்.
84. சங்கடங்கள் தீரும்.
85. துன்பங்கள் நீங்கும்.
86. ஆயுத பயம் நீங்கும்.
87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.
88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.
89. யோக சித்தி பெறலாம்.
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.
91. அரசாங்கச் செயலில் வெற்றி
பெறுவார்கள்.
92. மனப்பக்குவம் உண்டாகும்.
93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.
94. மனநிலை தூய்மையாக இருக்கும்.
95. மன உறுதி பெறும்.
96. எங்கு பெருமை பெறலாம்.
97. புகழும் அறமும் வளரும்.
98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
99. அருள் உணர்வு வளரும்.
100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.
தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்பில்)) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் 'அபிராமி அந்தாதி' எனும் நூலினை ஆய்வு
செய்து சென்னைப்பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப்பட்டம் பெற்றிருக்கின்றார்.
இவரது ஆய்வேடு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பின் தருமை ஆதீனத்தின் ஞானசம்பந்தப் பதிப்பக வெளியீடாக 'அபிராமி
அந்தாதி ஆராய்ச்சி' என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றிருக்கின்றது. அபிராமி அந்தாதிப் பாடல்களை விளக்கி 'அபிராமி அந்தாதி
விளக்கவுரை' எனும் தலைப்பிலும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார்.