கல்வி தகுதி:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதுமட்டும் அல்லாது கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு நிலை 1 ஊதிய அளவின்படி, ரூ.15700 முதல் ரூ. 50,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் விண்ணப்பதாரர் TNHRCE கோயம்புத்தூர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடவும். பின்னர், TNHRCE கோயம்புத்தூர் தொழில் அல்லது சமீபத்திய செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும். அதில், அலுவலக உதவியாளர் வேலை விளம்பரத்தை சரிபார்த்து பதிவிறக்கவும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.
இதை தொடர்ந்து, இப்பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பபடிவத்தை பிழை இல்லாமல் நிரப்பி, அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து "உதவி ஆணையர் அலுவலக, இந்து சமய அறநிலையத் துறை, டாக்டர் பாலசுந்தரம் ரோடு, கோவை - 18" என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கலாம்.