நம் முன்னோர்கள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆன்மிகத்தோடு சேர்த்துப் பயன்படுத்திய மாவிலை, வில்வ இலை, துளசி இலை, அறுகம்புல், வேப்பிலை ஆகிய ஐந்து இலை ரகசியங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
அருகம் புல் - ராகுவின் அம்சம்
முன்பெல்லாம் பசு மாடு அருகம் புல் தான் அதிகம் மேயும். அந்த பசு போட்ட சாணத்தை எரித்து கிடைக்கக்கூடிய சாம்பல், ஓர் சிட்டிகை வாயில் போட்டுக் கொள்வர். இதனால் பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும்.
நம் முன்னோர்கள் விபூதி என்று அழைப்பதை விட சாம்பல் என்றே அதிகமாக அழைத்து வந்தனர்.துளசி இலை
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாக வேலை செய்ய வேண்டுமெனில் நம் உடம்பில் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்து சுரக்க வேண்டும்.
இந்த தைராய்டு சுரப்பியை வலுப்படுத்துவதும், சரியாக சுரக்க உதவுவது துளசி இலை.
உடலில் எலும்பு உறுதியாக இருக்க, உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்க, உடலுறவுக்கு மிகவும் முக்கியான தாதுவாக இருப்பது காப்பர். இந்த தைராய்டு சுரப்பி சரியாக இருந்தால் நம் உடல் வலுவாக இருக்கும்.