HN2 x CLN2123A வின் வீரிய ஒட்டு. மகசூல் 96.2 டன்/ எக்டர். பயிரின் வயது 140-145 நாட்கள். பயிர் பாதி நிர்ணயிக்கப்பட்டு (90-95 செ.மீ) மற்றும் அதிக அடர்த்தி நடவு முறைக்கு உகந்தது. பழங்கள் வட்டமாகவும், மிதமான அளவு, குழுக்கள் 3-5 ஆகவும் அதிக விளைச்சல் இலைசுருள் வைரசிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டதுடன், வேர் முடிச்சு நூற்புழுவிற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
வீரிய ஒட்டானது LCR 2 x CLN 2123A. இது இலை சுருள் வைரசிற்கு எதிர்ப்புத் திறன் கொண்டது மற்றும் எவ்வித பூச்சிகொல்லியும் தெளிக்காமல் 90.2 டன்/ எக்டருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்கள் வட்டமாகவும், மிதமான அளவுடனும் பழுக்காத பழங்கள் வெள்ளையான பச்சை நிறத்துடனும், பழுத்த பழங்கள் நல்ல சிவப்பு நிறத்துடன் காணப்படுவதுடன், 3-5 பழங்கள் குழுக்களாக காணப்படும்.
வீரிய ஒட்டானது IIHR 709 x LE 812. மகசூல் 95.9 டன் / எக்டர். வயது 115 நாட்கள். பழத்தின் அமிலத்தன்மை (0.61%)
பழம் தட்டையாக உருண்டையாக பச்சை தோல் முகப்பாகவும், நீண்ட தொலைதூர பயணத்திற்கு ஏற்றதாகவும் உள்ளது. மகசூல் 30-35 டன்/ எக்டர். வயது 135-137 நாட்கள்.
கல்யாண்பூர் இரகத்திலிருந்து மறுதேர்வு செய்யப்பட்டது. பாதியளவு நிர்ணயிக்கப்பட்ட இரகம், பழமானது எந்த வரிப் பள்ளமும் இல்லாமல் வட்டவடிவில் சிவப்பு நிறத்தில் உள்ளது. மகசூல் 25 டன்/ எக்டர். இதன் வயது 135 நாட்கள்.
கோ 2 (1974)
ரஷ்ய முன்னோடியிலிருந்து தெரிவு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்படாத பூத்தல் வகை. சராசரி பழ எடை 50-60கி. பழங்கள் தட்டையாகவும், 4-5 பள்ளங்கரைக் கொண்டது. மகசூல் 28-30 டன்/ எக்டர். பயிரின் வயது 145 நாட்கள்.
இது கோ1 இரகத்தின் தூண்டப்பட்ட சடுதிமாற்ற இரகம். நிர்ணயிக்கப்பட்ட இரகம், நெருக்க நடவு (30x30 செ.மீ) உகந்தது. கொத்து கொத்தாக காய்க்கும் வகை. மகசூல் 40 டன்/ எக்டர். வயது 100-105 நாட்கள்.
இரகமானது பூசாரூபி மற்றும் கோ 3ஐ இனக்கலப்பு செய்வதன் மூலம் கிடைக்கப் பெற்றது. மானாவாரி பயிருக்கு உகந்தது. மகசூல் 30 டன்/ எக்டர்.